இந்தியா மீது 50% வரி விதிப்பு இன்று முதல் அமல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத வரி விதிப்பு அமலக்குக்கு வந்தது. 

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்த இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரியையும் அவர் விதித்திருந்தார். இந்த 50 சதவீத வரி விதிப்பு நியாயமற்றது என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தில் தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அரசு, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதைத் தாங்கும் வலிமையை இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும் என்று அகமதாபாத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.   

இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க நேற்று வெளியிட்டது. அதன்படி, புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த 6ம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் எந்த பொருட்களுக்கும் அல்லது கிடங்குகளில் இருந்து வெளியேற்றப்படும் எந்த பொருட்களுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Night
Day